ஜூலை 28ல் மார்க் ஆண்டனி

சென்னை: திரைக்கு வந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பஹீரா’ ஆகிய படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். பிறகு சல்மான்கான் நடித்து இந்தியில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட ‘தபாங் 3’ என்ற படத்துக்கு வசனம் எழுதிய அவர், நடிப்பிலும் கவனம் செலுத்தினார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘கே 13’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ‘காதலை தேடி நித்யா நந்தா’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

தவிர்க்க முடியாத பிரச்னை களால் அப்படம் தாமதமான நிலையில், விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கி முடித்தார். எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், ரீது வர்மா நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 28ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்