மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? : பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

சென்னை : வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.கோவை வந்துள்ள பிரதமர் மோடி, 1998ம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். கோவை ஆர்எஸ்புரம் தலைமை தபால் நிலையம் அருகே உயிரிழந்தோர் போட்டோக்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், காலணிகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் சென்று, உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில், இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?. 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள் சாதித்ததாக சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை. அதனால் வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது.#GoBackModi என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு

பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு