மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் இருந்து கடந்த 1ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க 12 மீனவர்கள் சென்றனர். அவர்கள் சென்ற படகு கடந்த 23ம் தேதியன்று தினாது தீவு அருகே இருந்தபோது, மாலத்தீவு கடலோர காவல் படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாலத்தீவு அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரையும், அவர்களது மீன்பிடி படகையும் விடுவித்திட ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்