மேஜர் லீக் கிரிக்கெட் எம்ஐ நியூயார்க் சாம்பியன்

டாலஸ்: அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சியாட்டில் ஆர்கஸ் – எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூயார்க் பந்துவீச, சியாட்டில் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. டி காக் 87 ரன் (52 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ரஞ்ஜேன் 29, பிரிடோரியஸ் 21 ரன் எடுத்தனர். எம்ஐ தரப்பில் போல்ட், ரஷித் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய நியூயார்க் 16 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து வென்று கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 137 ரன் (55 பந்து, 10 பவுண்டரி, 13 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். சியாட்டில் பவுலர் கேமரான் கனான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார் (மொத்தம் 11 விக்கெட்).

Related posts

ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி