ஆளுநராக மகாராணி போல இருந்தேன் நான் மீண்டும் அரசியலுக்கு வந்ததால் அண்ணாமலைக்கு அசவுகரியமா?: தமிழிசை பதில்

சென்னை: தென்சென்னை நாடமன்ற வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முகநூல் பக்கத்தின் வாயிலாக பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆளுநர் பதவியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக பலரும் விமர்சனம் செய்கிறார்கள், ஆனால் நான் அரசியலுக்கு வருவதை உயர்வாக பார்க்கிறேன். மக்கள் பணியை தான் செய்ய விரும்புகிறேன். பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் தான் மக்களை சந்திக்கிறார்கள். ஆனால், நான் அப்படி இல்லை. ஆளுநராக இருக்கும்போதுகூட மக்களை சந்தித்தேன். ஆளுநராக இருந்தபோது மகாராணிபோல் பார்த்துக்கொண்டார்கள். தண்ணீர் கேட்டால் கூட கொடுப்பதற்கு 4 பேர் ஓடி வருவார்கள். ஆனால், நான் மக்களை தேடி வர விரும்புகிறேன்.

பாஜவின் 6 சட்டமன்ற அலுவலகங்களும் 24 மணி நேரமும் செயல்படும். என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போட்டு விடுங்கள். புதுச்சேரியில் ஒரு கோப்பு கூட நான் கிடப்பில் போடவில்லை. சந்தேகத்திற்கு இடமளிக்கும் பெயரில் இருந்த ஒருசிலவற்றை தான் கிடப்பில் வைத்திருந்தேன். என்னுடைய 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் எந்த குற்றமும் செய்தது இல்லை. நான் மீண்டும் அரசியலுக்கு வந்ததால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர். அது தவறு அவர் என்னை சிறப்பாக நல்ல முறையில் வரவேற்றார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் நாடாளுமன்றத்தில் தமிழில் தான் பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

Related posts

சேத்தியாத்தோப்பு அருகே விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை

393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு கட்டிட இடிபாடுகள் கொட்டும் கிடங்காக மாறியது