திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் திருப்பணி அண்ணா பல்கலை. பொறியியல் வல்லுனர் குழு நேரில் ஆய்வு

நாகர்கோவில்: திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் திருப்பணிகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வல்லுனர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மகாதேவர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருக்கோயிலில் கல்சுவர்கள் பாவு கல்லில் படிந்துள்ள சுண்ணாம்பு காரையினை தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல், பெயின்ட்டிங் பணிகள் ரூ.7.57 லட்சம் மதிப்பில் நடக்கிறது. இதனை போன்று திருக்கோயிலில் வெளிச்சுற்று பிரகாரம் 8 அடியாக, யானைகள் ஊர்வலம் நடைபெறும் வகையில் தளத்தை விரிவுபடுத்தும் பணி ரூ.26.27 லட்சம் மதிப்பில் நடக்கிறது.

மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பில் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பொதுநல நிதியில் இருந்தே இந்த பணிகள் நடைபெறுகிறது.
தொல்லியல் துறை ஆய்வாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து என்னென்ன பணிகளை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்றும் கருத்துகளை தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மண்டல குழுவில் 9 பேர் கொண்ட தொல்லியல் குழுவினர் வந்து பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கினர். உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர் குழுவும் இதற்கு ஒப்புதல் வழங்கியது. அதன் பிறகுதான் மதிப்பீடு வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. கோயில் மேல்பகுதியில் உள்ள தளத்தினை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வல்லுநர்கள், நெல்லையில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் பிரிவு துறை தலைவர் முருகன், உதவி பேராசிரியர் யூனூஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களுடன் இந்து சமய அறநிலையத் துறை பொறியாளர் ஐயப்பன், கோயில் மேலாளர் ரமேஷ்குமார் உடனிருந்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயிலில் திருப்பணியின் ஒரு பகுதியாக மேல்கூரை சீரமைக்கப்பட உள்ளது. மேற்கூரை அதிக அளவு எடை உள்ளதால் நீர்க்கசிவை சீரமைக்க இயலவில்லை. எனவே மேற்கூரை எடையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிபுணர் குழுவின் ஆலோசனை பெறப்படுகிறது’ என்றனர்.

Related posts

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு

தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு