மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அல்கராஸ் மீண்டும் சாம்பியன்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் கார்லோஸ் அல்கரஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தார். இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்டிரப்புடன் (33 வயது, 65வது ரேங்க்) மோதிய நடப்பு சாம்பியன் அல்கரஸ் (20 வயது, 2வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அல்கரஸின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த லெனார்ட் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

எனினும், கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி லெனார்டை திணறடித்த அல்கராஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மாட்ரின் ஓபன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது. மாட்ரிட் ஓபன் பட்டத்தை தொடர்ந்து 2வது ஆண்டாக வென்று கோப்பையை தக்கவைத்த 2வது வீரர் என்ற பெருமை அல்கராஸுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, ரபேல் நடால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். மிக இளம் வயதில் 10 ஏடிபி டூர் பட்டங்களை வென்ற வீரர்கள் வரிசையில் அல்கரஸ் (20 வயது) 6வது இடத்தை பிடித்துள்ளார். விலாண்டர், போர்க், நடால், பெக்கர், அகாசி ஆகியோர் 19 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Related posts

வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது

காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!