சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேகலாயா தலைமை நீதிபதியாக நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் எஸ்.வைத்தியநாதன் கோவையில் பிறந்தவர். மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1986ம் ஆண்டு தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், 2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2015ம் ஆண்டு நிரந்திர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேகலாயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

Related posts

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவல்

சிவகங்கை அருகே கீழக்கண்டனையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய காவலர்களுக்கு அபராதம்