மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

சென்னை: சென்னையில் வருகிற 20ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும். இதில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கலைஞரின் நூற்றாண்டு விழா பொருள் குறித்து கூட்டம் நடைபெறும்.

Related posts

சிவகங்கை கப்பல் நாகை வந்தது; இலங்கைக்கு 13ம் தேதி முதல் போக்குவரத்து.! நாளை சோதனை ஓட்டம்

உலக செவிலியர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்!