தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்: 62,559 வழக்குகளில் தீர்வு, ரூ.506 கோடி பைசல்

சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் 62,559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.505 கோடியே 78 லட்சத்து 18,659 பைசல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது.

இந்த லோக் அதாலத்தில் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர்கள் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 64 ஆயிரத்து 410 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதேபோல், நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 441 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளில் தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகள், கீழமை நீதிமன்றங்களில் 462 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 62,559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூபாய் 505 கோடியே 78 லட்சத்து 18,659 பைசல் செய்யப்பட்டது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்