2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

சேலம்: 2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு வைத்துள்ளார். பின்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பா.ஜ.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014-ல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014-க்கு முன் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. மேலும் ஒன்றிய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டும் தமிழ்நாடு வருகின்றனர், மாநில பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை எனவும் பழனிசாமி குற்றச்சாட்டு வைத்தார்.

கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை – இபிஎஸ்

மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை

கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தது; தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் விலையை குறைக்கவில்லை இவ்வாறு கூறினார்.

Related posts

குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யுடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்?

பட்டியலினத்தவர் சப்பரம் தூக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!!

மதுரையில் ஒரே நாளில் 11 பேர் உட்பட 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை