10 ஆண்டுகளாக சாராயம் விற்ற பெண் சாப்பாட்டு கடை நடத்த தள்ளுவண்டி: சென்னை உதவி ஆணையரின் புதிய முயற்சிக்கு பெருகும் பாராட்டு

சென்னை: வாழ்வாதாரத்திற்காக வழி தவறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனைகள் வழங்குவது மட்டுமின்றி அவர்கள் திருந்தி நேர்வழியில் வாழ்வதற்கு உதவி செய்தாலும் குற்றங்களை தடுக்க முடியும் என்பதை சென்னை ராயப்பேட்டை உதவி ஆணையர் நிரூபித்து காட்டியிருக்கிறார். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையராக பணியாற்றுபவர் பாலமுருகன். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் திருந்தி நேர்வழியில் வாழ்வதற்கு உதவினால் குற்றங்களை தடுக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட அவர் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து கைது செய்யப்பட்ட பாலம்மாள் என்பவருக்கு உதவி இருக்கிறார்.

10-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய விற்பனை வழக்குகள் இருக்கும் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கணவர் மது பழக்கத்திற்கு ஆளானதால் இரு பெண் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், குடும்பத்தை காக்க மது விற்பனையில் இறங்கியதும் தெரிந்து கொண்டார். இதையடுத்து நேர்மையான வழியில் அவர் வாழுவதற்கு உதவியாக சாப்பிட்டு கடை நடத்த தள்ளு வண்டியினையும், உணவகம் நடத்துவதற்கு ஒரே வாரத்திற்கு தேவையான அரசி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வழங்கி இருக்கிறார்.

சிட்டி சென்டர் பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு மக்களிடம் கையும், களவுமாக பிடிப்பட்ட 17 வயது சிறுவன் வாழ்வில் கல்வி என்ற தீபத்தை ஏற்றி இருக்கிறார் பாலமுருகன். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் உறவினர்கள் சிலரின் தவறான வழிகாட்டுதலால் செல்போன் திருட்டில் ஈடுபட முயற்சித்து சிக்கி கொண்டதை அறிந்த பாலமுருகன் அபிராமபுரம் செந்நாபுரி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிலையத்தில் ஐடிஐ படிப்பதற்கு உதவி இருக்கிறார். படித்து முடித்தால் வேலை வாங்கி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.

Related posts

மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கரில் சாகுபடி தஞ்சாவூரில் எள் அறுவடை பணி விறுவிறுப்பு

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவாரா?.. எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கக்கோரி நெல்லை-திருச்செந்தூர் சாலையில் 7வது வார்டு மக்கள் மறியல்