எல்.ஐ.சி நிறுவனத்தில் புதிய பாலிசிதரர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைவு: ஆயுள் காப்பீட்டு துறையும் வீழ்ச்சி

சென்னை: எல்.ஐ.சி நிறுவனத்தில் புதிய பாலிசிதாரர் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததால் ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு துறையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆயுள் காப்பீடு கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 2022ஆம் நிதியாண்டு முடிவில் புதிய ப்ரீமியம் தொகை ரூ.59,608 கோடியாக இருந்த நிலையில் 2023 மார்ச் முடிவில் அது ரூ.52,081 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்.ஐ.சி நிறுவனம் 32.14 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு துறையில் புதிய ப்ரீமியம் தொகை 12.63 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இந்நிலையில் தனி நபர் பாலிசிதாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குழு பாலிசிதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கத்தின் துணை தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 35.14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன குறிப்பாக எச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் புதிய ப்ரீமியம் தொகை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. மேக்ஸ் லைப் நிறுவனம் 42 சதவீதமும், ஐசிஐசிஐ 30.77 சதவீதமும், எஸ்.பி.ஐ 23.14 சதவீதமும் புதிய பாலிசிகளை வளர்ச்சி கண்டுள்ளன.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு