செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நூலகம்: எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

புழல்: செங்குன்றத்தில் புதிய நூலகத்துக்கான அடிக்கல்லை எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் நாட்டினார். செங்குன்றம் கிளை முழுநேர நூலகத்திற்கு கூடுதலாக கட்டிடம் கட்டுவதற்கு மாதவரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நூலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நூலக அலுவலர் ஜோதி பாஸ் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நூலக கட்டிட பணி விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு மிதிவண்டி: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 291 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் இன்னாசி, முகமது அலி, சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு 291 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் யோக மலர் அனைவரையும் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.

Related posts

தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ584 கோடி உயர்ந்தது

தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு