சாராய வியாபாரிகளிடம் தொடர்பு, 2 எஸ்ஐக்கள் உட்பட 4 போலீசார் டிரான்ஸ்பர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவாஜி, வெண்ணிலா, தலைமை காவலர் வசந்தா ஆகியோர் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் எஸ்பி ஆல்பர்ட்ஜானுக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய காவலர் கோபி என்பவரும் கள்ளச்சாராய வியாபாரிகளிடம் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழப்பு

பாஜக பெரும்பான்மை பெறுவதை I.N.D.I.A. கூட்டணியால் தடுக்க முடியும் : கார்கே நம்பிக்கை

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை