அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்: சசிகலா பேட்டி

திருவாரூர்: நாடாளுமன்ற தேர்தலின் போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் – பிரபா தம்பதியரின் மகன் திருமண விழாவில் சசிகலா கலந்துகொண்டார். அப்போது மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவே புறக்கணித்துள்ளன. மாற்றத்தை தேர்தலின் போது பார்க்க முடியும்.

ஒரு கட்சியில் தொண்டர்களின் விருப்பம் தான் வெற்றி பெரும். அதிமுக தொண்டர்களின் முடிவு என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா ஆட்சியின் போது கள்ளச்சாராய மரண நிகழ்வுகளை பார்த்திருக்க முடியாது. தமிழ்நாட்டை அதிமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். நாடாளுமன்ற தேர்தலின் போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம் இவ்வாறு கூறினார்.

Related posts

வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை