வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு தான்சானியாவில் 63 பேர் பலி

தான்சானியா: கிழக்கு ஆப்ரிக்க நாடான வடக்கு தான்சானியாவின் ஹனாங் மலைக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர் மற்றும் 85 பேர் காயமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்க ராணுவமும், மீட்புக் குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருந்தும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல்கள் உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.

இதற்கிடையே துபாயில் நடந்த ஐநா காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன், உடனடியாக தான்சானியாவுக்கு திரும்புவதற்காக அறிவித்துள்ளார். அவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள் மீட்புப் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.