லாலாப்பேட்டை பெல் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை : லாலாப்பேட்டை பெல் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை கிராமத்திலிருந்து பெல் கம்பெனி மற்றும் ஊரக பகுதிகளுக்கு செல்ல பெல் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெல் பகுதியில் இருந்து லாலாப்பேட்டை, தக்காம்பாளையம், சீக்கராஜபுரம், திருவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் லாலாப்பேட்டை பெல் இணைப்பு சாலையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த தார் சாலை பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது.

இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் போது தவறி கீழே விழுகின்றனர். எனவே லாலாப்பேட்டை பெல் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மாடர்ன் விவசாயி!

குழந்தைப் பேறின்மை அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை!

போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது