கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 21வது நாளாக தடை..!!

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 21வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவி. இங்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து இயற்கை எழில் சூழ்ந்த அருவியில் குளித்துவிட்டு செல்வர்.

இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ளருவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 21வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்