போலந்து நாட்டு பெண்ணுடன் கிருஷ்ணகிரி பேராசிரியர் டும்…டும்… தமிழ் கலாச்சார முறைப்படி நடந்தது

கிருஷ்ணகிரி: போலந்து நாட்டு பெண்ணை காதலித்த, கிருஷ்ணகிரி பேராசிரியர் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே குரியனப்பள்ளியை சேர்ந்தவர் திம்மப்பா. இவரது மனைவி பத்மம்மா. இவர்களின் மகன் ரமேஷ்(33). பள்ளி, கல்லூரி படிப்பை கிருஷ்ணகிரியில் படித்த இவர், மேற்படிப்புக்காக போலந்து நாட்டிற்கு சென்றார்.

அங்கு மேற்படிப்பை தொடர்ந்து, அங்குள்ள விலானோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் போலந்து நாட்டில் அவர் கல்லூரி படிப்பு படித்த போது, அவருக்கும் அதே நாட்டை சேர்ந்த எவலினா மேத்ரோ(30) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. எவலினா மேத்ரோ அங்குள்ள அமெரிக்கன் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் தங்களின் காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ரமேஷ், எவலினா மேத்ரோ ஆகியோர் கடந்த மாதம் இந்தியா வந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே குரியனப்பள்ளி கிராமத்திற்கு வந்த அவர்களுக்கு, நேற்று தமிழ் கலாசார முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக தமிழ் முறைப்படி பத்திரிகை அச்சடித்து நிச்சயார்த்தம் நடந்து, பின்னர் திருமணம் நடந்தது.

Related posts

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்