கோயம்பேடு – ஆவடிக்கு மெட்ரோ ரயில் சேவை: சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிப்பு; விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பு

சென்னை :சென்னை புறநகர் பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி வரையிலான, 3வது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும், அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கவும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிக்கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து புதிய வழித்தடமாக சென்னையின் புறநகர் பகுதிகளான சிறுசேரி – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்கட்டமாக சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த அறிக்கை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்