குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்; வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை..!!

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சீசனுக்குரிய அறிகுறி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் சீசன் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 3 வாரங்களை கடந்தும் சீசனுக்கான அறிகுறி காணப்படவில்லை. எப்போதும் போல வெயில் அடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிய கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீராட நேற்று இரவு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்