கொங்கு அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி 1 கப்
துவரம் பருப்பு 1/2 கப்
சீரகம் 1/4 தேக்கரண்டி
கடுகு 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 2 கொத்து
வரமிளகாய் 4
சின்ன வெங்காயம் 16 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 9
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
சாம்பார் தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
தண்ணீர் 3 1/2 கப்
பசு நெய் 3 மேஜைக்கரண்டி

செய்முறை

அரிசியையும் துவரம் பருப்பையும் நன்றாக தண்ணீரில் அலசி ஊற வைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்துகோங்க. நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன், சீரகத்தை சேர்த்துகோங்க அதனுடன் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக நெடி வரும் வரை வதக்க வேண்டும. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க. அதில் பூண்டு பற்களை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், வரமிளகாய் தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க .இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும். இச்சமயத்துல அதில் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்துகோங்க இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை மூடி குறைந்த பட்சம் 5 விசில் விட்டுகோங்க. அடுப்பை அணைத்து விடவும். பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் பிரஷர் குக்கரின் மூடியை திறந்து பசு நெய்யை விட்டுகோங்க. அதன் பிறகு புளி சட்னியுடன் மற்றும் கெட்டியான புளிப்பற்ற தயிருடன் சாப்பிட்டு பாருங்கள்.

Related posts

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

பருப்பு இல்லாமல் டிபன் சாம்பார்

கம்பு மாவு மெதுவடை