கொடுமுடியில் சேதமடைந்த சாலை நிலை தடுமாறும் வாகனங்கள்

 

க.பரமத்தி, நவ. 15: கரூர் -கொடுமுடி நெடுஞ்சாலையில் ரெங்கநாதபுரம்பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதமடைந்துள்ள சாலையால் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன.கரூர் கொடுமுடி நெடுஞ்சாலை க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி நடுப்பாளையம் பிரிவு கிழக்கே ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதன் கரூர் கொடுமுடி, ஈரோடு பகுதிக்கு தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று திரும்புகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் விவசாயிகள், விவசாய விளை பொருட்களை இந்த வழியாகத்தான் உள்ளூர் வெளியூர் சந்தைகளுக்கு டூ வீலரில் வைத்துக்கொண்டு விவசாயிகள் சென்று வருகின்றனர். ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த நெடுஞ்சாலை சிதிலமடைந்துள்ளதால் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறது. இந்த வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்