காலிஸ்தான் குழு தலைவர் கொல்ல முயற்சி.. இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா: அமெரிக்கா மற்றும் தங்களது குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹார்தீப் நிஜார் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்ட அதனை இந்திய திட்டவட்டமாக மறுத்தது.

இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் அமெரிக்காவில் காலிஸ்தான் குழு தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுன் என்பவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதனை தாங்கள் முறியடித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. இதற்கு பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பன்னுனை கொலை செய்ய திட்டமிட்டதாக இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ; அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் தாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வருவதை தான் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதனை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கண்டறிய இந்தியா தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். கனட மக்களின் பாதுகாப்பு தங்களுக்கு முக்கிய என்றும் அவர் பேசியிருக்கிறார்.

அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு கனடா தொடர்ந்து இடம் கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி குற்றச்சட்டியுள்ளார். தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கனட தூதரக அதிகாரிகள் தலையிடுவதை பார்க்க முடிவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாக்சே தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பயங்கவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையே மீண்டும் வார்த்தை போர் எழுந்துள்ளது விவாத பொருளாகியுள்ளது.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்