கேரளாவுக்கு கனிமங்களை எடுத்துச் செல்ல குத்தகைதாரர்கள், உரிமையாளர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்ல குத்தகைதாரர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் குவாரி பணிகளை தடுத்து நிறுத்த உத்தரவிடக்கோரி ஹேமர்லால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு;

மேற்கு தொடர்ச்சி மலையில் விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் இடங்களில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். கனிமங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல குத்தகைதாரர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் சட்டவிரோத குவாரி குறித்த விசாரணை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றப்படும் என்றும் எச்சரித்தனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்