கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!

குமரி: கன்னியாகுமரி அருகே கணபதிபுரத்தில் கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழக கடற்கரை பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் சீற்றத்துடனும், கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று குளச்சல் கடற்கரையில் குளித்த 2 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த 3 பேர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த 12 மாணவர்கள், குமரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விட்டு பின்னர், சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் குளித்து மகிழ்ந்துள்ளனர். அப்போது திடீரென கடலில் குளித்த மாணவர்களில் 6 பேரை அலை இழுத்துச் சென்றது. இதனை கண்ட அக்கம்பக்கத்தில் இருந்த சுற்றுலா பயணிகள், தீயணைப்புத்துறைக்கும், கடலோர காவல்படைக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பிரவீன் சாய், சாரு கவி, காயத்ரி, வெங்கடேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவர்கள் நேஷ, சர்வதர்ஷித் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் துரதிஷ்டவசமாக சர்வதர்ஷித் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எச்சரிக்கையை மீறி கடலில் குளித்ததால் 5 மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு