கோவிந்தா.. கோவிந்தா..!: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரமோற்சவத்தின் 7ம் நாளில் திருத்தேர் பவனி கோலாகலம்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரமோற்சவத்தை ஒட்டி தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்திபெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. 76 அடி உயரம் உள்ள தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தாரை, தப்பட்டைகள் முழங்க தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன. காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்