காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

 

Related posts

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது