காமராஜர் பிறந்த நாள் விழாவில் மஞ்சப்பை விழிப்புணர்வு

காவேரிப்பட்டணம் : காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி, மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர்கள் பால்ராஜ், சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி, ‘காமராஜரின் சாதனைகள்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் குமுதம், அமுதா, மாதவமணி, சாந்தி, வடிவுக்கரசி, நாகராணி, பாலநாதன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது