கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் பகுதிகளில் ஆடிப்பெருக்கில் விவசாயிகள் நெல் விதைப்பதில் ஆர்வம்

கீழ்பென்னாத்தூர் : திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாக திகழ்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் நெல் மற்றும் மணிலா சாகுபடியில், விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாரம்பரியமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் விதைப்புக்கு முன்பு பச்சரிசி, கடலை, வெல்லம் உள்ளிட்டவைகள் கலந்து சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகளுடன் நெல் விதை விதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விதைப்பு செய்ய வேண்டிய நெல் விதைகளின் முளைப்பு திறனை சோதனை செய்வதற்காக, ஒரே இடத்தில் மண்ணில் நெல் விதைகளை தூவி மண் போட்டு மூடி விடுவோம். இப்பகுதிகளில் ஆவணியில் விதைப்பு பணி துவங்கும் என்பதால், ஆடி பெருக்கில், விதை நெல் ஈட்டு முளைப்பு திறனை சோதனை செய்து குடும்பத்தினருடன் வழிபட்டோம்’ என்றார்.

மேலும் ஆடி 18 அன்று நெல் விதை விதைக்கப்பட்டு, பின்பு நடவு செய்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று நெல் அறுவடை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்
கது.இதேபோல் கலசபாக்கம் பகுதியில் உள்ள விவசாயிகள் நேற்று நெல் விதை விடும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். தற்போது கலசபாக்கம் பகுதியில் வேளாண் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்