கச்சத்தீவு பிரச்னை எப்பயோ முடிஞ்சது பழைய பஞ்சாங்கத்தையே பாடும் பிரதமர் மோடி: பிரேமலதா விளாசல்

சென்னை: வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து கொருக்குப்பேட்டையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மோடி பழைய பஞ்சாங்கத்தை பேசி வருகிறார். கச்சத்தீவு பிரச்னை எப்போதோ முடிந்தது, அதை இப்போ எடுத்து வைத்து பேசி வருகிறார். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, தங்கம் விலை உயர்ந்துள்ளது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இப்படி மோடி ஆட்சியில் தொடர்ந்து விலை வாசி உயர்ந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படித்த இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறினார். வேலைவாய்ப்பு அளித்தாரா… அதேபோல் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று கூறினார். போட்டாரா… மீனவர் பிரச்னை கண்டு கொண்டாரா… இதை எதையும் கண்டுகொள்ளாமல் தற்போது ஏதேதோ பேசி வருகிறார். இவ்வாறு பிரேமலதா பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தேமுதிக மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்