1974ம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?.. ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: 1974ம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பான ஆவணங்களை தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இதை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், 1974ல் கச்சத்தீவு இந்திரா காந்தியால் இலங்கைக்கு தரப்பட்டது என்று கூறியிருந்தார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்; 1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் திரு மோடி அவர்கள் இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி. மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. “எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை” என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் திரு மோடி நியாயப்படுத்தினார்

மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே

பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி வழிகிறது வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி