நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் ஓபிசி உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப் பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போது மத்திய சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Related posts

ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி கட்டடத்தினை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி.

மின்இணைப்பு வழங்கக் கோரி மனு: ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி