இந்தியா, அமெரிக்காவை போன்று ஆஸ்திரேலியாவிலும் ‘டிக்டாக்’ தடை

கான்பெர்ரா: சீனாவின் ‘டிக்டாக்’ செயலியின் பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் தகவல் திருட்டு விவகாரத்தால், டிக்டாக் செயலியை கடந்த சில ஆண்டுக்கு முன் இந்தியா தடை செய்தது. அதேபோல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளும் டிக்டாக் செயலியை பாதுகாப்பு காரணங்களை கூறி தடை செய்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியாவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரேஃபஸ் கூறுகையில், ‘உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பரிந்துரையின் அடிப்படையில் டிக்டாக் செயலியைத் தடைசெய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் வழிகாட்டுதலை நாங்கள் பின்பற்றுவோம். அரசு நிறுவன சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலியை உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related posts

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நாளை முதல் 3 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம்!!

அஜித் பவார் கட்சியைத் தொடர்ந்து ஷிண்டேவின் சிவசேனாவும் போர்க்கொடி : பதவியேற்ற மறுநாளே பகிரங்கமாக வெடித்த அதிருப்தி!!

மக்களவையின் சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி டகுபதி புரந்தேஸ்வரி தேர்வு?