ஜவ்வரிசி சாட்

தேவையானவை :

ஜவ்வரிசி – ஒரு கப்,
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2,
சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்,
கேரட் துருவல் – சிறிதளவு,
எலுமிச்சம்பழம் – அரை மூடி,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

தேவையான அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி காய வைத்து, போதுமான அளவு சூடு வந்தவுடன் ஜவ்வரிசியை அதில் போட்டு பொரித்து எடுக்கவும். இதனுடன் வேக வைத்து, துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு, சாட் மசாலா பொடி, கேரட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்த மல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

Related posts

சாமை மிளகு பொங்கல்

பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம்

வேர்க்கடலை பேடா