சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு

இஸ்லாமாபாத்: சிறையில் இருக்கும் இம்ரான் கானை அவரது மனைவி புஷ்ரா பிபி சந்தித்து பேசினார். ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது மனைவியான புஷ்ரா பிபிவுக்கும் ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பனிகலாவில் உள்ள இம்ரான் கான் வீட்டை சிறை சாலையாக மாற்றி அங்கு புஷ்ரா அடைக்கப்பட்டுள்ளார். ஈத் பண்டிகையையொட்டி சிறையில் உள்ள இம்ரானை சந்திக்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முன்தினம் அடியாலா சிறைக்கு சென்று இம்ரானை புஷ்ரா சந்தித்தார்.

Related posts

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!!