ஜெகந்நாதர் கோயில் சர்ச்சை.. தமிழ்நாட்டு வளங்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றியதே தவிர பிற மாநிலங்களின் வளங்கள் இங்கு வந்ததில்லை: மோடிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!!

சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்று வந்த பருப்பு இறக்குமதி குஜராத் துறைமுகத்துக்கு ஒன்றிய அரசு மாற்றியதால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது;

பருப்பு இறக்குமதி குஜராத்துக்கு மாற்றம்
தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்றுவந்த பருப்பு இறக்குமதி குஜராத் துறைமுகத்துக்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. அனுமதியை ஒன்றிய அரசு மாற்றியதால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு வைத்துள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற பருப்பு இறக்குமதியால் ஆயிரக்கணக்கான மாவு மில்கள் பயன்பெற்று வந்தன.

ஒன்றிய அரசு முடிவால் தொழிலார்கள் பாதிப்பு
மாவு மில்கள் மற்றும் பருப்பு இறக்குமதி தொழிலை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிய அரசின் முடிவால் வேலையிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நடந்த பல தொழில்களையும் குஜராத்துக்கு ஒன்றிய அரசு மாற்றிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு புகார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு வளங்களைத்தான் ஒன்றிய அரசு வேறு மாநிலத்துக்கு மாற்றியுள்ளதே தவிர பிற மாநிலங்களின் வளங்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை.

பிரதமர் மோடிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி
பூரி ஜெகந்நாதர் கோயில் சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக பிரதமர் மோடி கூறியதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.

 

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது