பலாப்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

பலாப்பழம்-10 துண்டுகள்.
சக்கரை-1கப்.
பால்-1/2 லிட்டர்.
மில்க் பவுடர்- 1 கப்.
பிரஸ் கிரீம்- சிறிதளவு.
சிறிதாக வெட்டிய பாதாம்- சிறிதளவு

செய்முறை:

பலாப்பழம் 10 துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பிரெஸ் கிரீம் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் பால் ½ லிட்டர், மில்க் பவுடர் 1 கப், சக்கரை 1 கப் சேர்த்து சற்று கெட்டியாகும் வரை கிண்டவும். இப்போது அரைத்து வைத்திருந்த பலாப்பழத்தையும் சேர்த்து நன்றாக கிண்டவும். ஒரு பவுலை எடுத்து அதில் செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து பிரிட்ஜில் ஒருநாள் வைத்து எடுக்கவும். இப்போது பலாப்பழ ஐஸ்கிரீம் தயார். ஒரு பவுலில் ஐஸ்கிரீம் வைத்து அதன் மீது பொடியாக நறுக்கிய பிஸ்தாவை தூவி பரிமாறவும். சூப்பர் டேஸ்டியாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

Related posts

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்

துவரம் பருப்பு இட்லி உப்புமா