இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலையில் வெடிப்பு: சாலைகளில் அடர் சாம்பல், பாறை துகள்கள் படர்ந்ததால் மக்கள் சிரமம்..!!

இத்தாலி: இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாக கருதப்படும் இத்தாலியில் உள்ள 3330 மீட்டர் உயரம் உள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடுகிறது. எரிமலை வெடிப்பின் போது வெளிப்பட்ட கரும் சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடு பாதை முழுவதும் சூழ்ந்து உள்ளது.

இதனால் பாதுகாப்பு காரணம் கருதி கட்டானியா நகரில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதே போன்று மத்திய மெக்சிகோவில் உள்ள போபோ கெட்பில் எரிமலை வெடிப்பு காரணமாக பியூபிலா நகரை அடர் சாம்பல் மூடியுள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.

Related posts

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி