எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா?.. சிரிப்பு தான் பதில் என அண்ணாமலை ரிப்ளை

கோவை: எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துக்கு என்னுடைய பெரும் சிரிப்பு தான் அதற்கு பதில் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; காந்தியை அதிகமாக தூக்கி பிடிப்பவர்கள் நாங்கள் தான். கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்கவில்லை. கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்கக் கூடாது. வீரலட்சுமி யார் என எனக்கு தெரியாது.

யார் வேண்டுமானாலும் ஊழல் பட்டியலை வெளியிடலாம். நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்க்கு செல்ல வேண்டும். நீட் தேர்வை அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து பேசிய அவர்; தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும்.

பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார் என கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழ்நிலை உள்ளதாக ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு சிரிப்பு தான் பதில் என அண்ணாமலை பதிலளித்தார்.

Related posts

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் கைது!

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்