உதயமார்த்தாண்டபுரம் ஈசிஆர் சாலை அருகே பாசன வாய்க்கால் மரப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: உதயமார்த்தாண்டபுரம் ஈசிஆர் சாலை அருகே பாசன வாய்க்கால் மரப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஈசிஆர் சாலையோரம் தனியார் பள்ளிக்கும் கோபாலசமுத்திரம் செக்போஸ்ட்டுக்கும் இடையே தெற்கு பகுதியில் பாசன வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த பாசன வாய்க்கால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் சாகுபடி நிலத்திற்கு பாசனமாக உள்ளது. இந்த வாய்க்கால் மேல் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் மரப்பாலம் ஒன்று பல வருடங்களாக உள்ளது.
இதில் தான் விவசாயிகள் தங்களது சாகுபடி வயலுக்கும், விவசாய பணிகளின் போது விவசாய பொருட்களை எடுத்து செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, சற்றுத்தூரத்தில் உள்ள பள்ளியமேடு கிராமத்திற்கு குறுக்கு வழியாக செல்ல இந்த மரபாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளும், இந்த மரபாலத்தை கடந்து தான் சென்று வருகிறது. இப்பகுதி முக்கிய மரபாலமாக உள்ள நிலையில் தற்போது இந்த மரப்பாலம் சேதமாகியுள்ளன. பல இடங்களில் நடந்து செல்ல பயன்படும் பலகை இல்லாமல் உள்ளது. விவசாயிகள் இப்பகுதியில் ஆபத்தாக சென்று வருகின்றனர். கால்நடைகள் அடிக்கடி இந்த பாசன வாய்க்காலில் விழுந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி சேதமான இந்த மரப்பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சீரமைக்க வேண்டும் வருங்காலத்தில் இந்த மரப்பாலத்திற்கு பதில் புதிய காங்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு