ட்ரேப் பிரிவில் தங்கம், வெள்ளி

ஆண்கள் துப்பாக்கிசுடுதல் ட்ரேப் குழு போட்டியில் இந்தியா நேற்று தங்கப் பதக்கம் வென்றது. பிரித்விராஜ் தொண்டைமான், கைனன் செனாய், ஸோரவர் சிங் சாந்து ஆகியோரடங்கிய இந்திய அணி, பைனலில் அபாரமாக செயல்பட்டு 361 புள்ளிகளுடன் (ஆசிய விளையாட்டு சாதனை) முதலிடம் பிடித்தது. இந்த போட்டியில் குவைத் அணி வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலமும் வென்றன. மகளிர் ட்ரேப் குழு போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் மனிஷா கீர், பிரீத்தி ரஜக், ராஜேஷ்வரி குமாரி ஆகியோர் ஒட்டுமொத்தமாக 337 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை முத்தமிட்டனர். இந்த போட்டியில் சீனா 357 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் (336) வெண்கலம் பெற்றது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்