மதுபோதையில் அரசுப் பேருந்தை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்: போலீசார் விசாரணை

காரைக்கால்: காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்தை மது போதையில் தாறுமாறாக இயக்கிய ஓட்டுனரை பயணிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசு பேருந்து இயக்கப்பட்டது, பேருந்தை ஓட்டுநர் ராஜராஜன் அதிவேகமாக இயக்கியதால் கூச்சலிட்ட பயணிகள் நிறுத்துமாறு கூறியுள்ளார். எனினும் நிறுத்தாமல் ஓடியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

திருநள்ளாறு புறவழிசாலையில் செல்லவேண்டிய பேருந்து வளைவில் திரும்பும் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது, பேருந்தை நிறுத்த கோரி பயணிகள் சாதம்ப்போட்டதை கண்டா வாகன ஓடிகள் வாகனத்தை மறித்து ஓட்டுனரை இறக்கி விசாரித்தனர். அப்போது ஓட்டுநர் ராஜராஜன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை காவலர்களிடம் ஒப்படைத்தனர், பின்னர் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

Related posts

உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கு முழுமையான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு

சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: மூன்று பெண் உள்பட 5 பேர் கைது

எப்போது கைதாவார்?