இந்த வெற்றிக்கு தான் நீண்ட காலமாக காத்திருந்தோம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

சென்னை: சந்திரயானின் வெற்றி தருணத்திற்காக தான் நீண்ட காலமாக காத்திருந்தோம் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் – 3 வெற்றிகரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிகிறது. இந்த தருணம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தான் நீண்ட காலங்களாக காத்திருக்கிறோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு