நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக 5வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்.!

சென்னை: நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியலில், இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனம் என்று ஐஐடி மெட்ராஸ் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடி 5வது முறையாக நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம், சண்டிகர் பிக்மர் மருத்துவமனை 2வது இடம், தமிழகத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடம் பிடித்துள்ளது. இதுபோன்று, சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம், தமிழகத்தில் சென்னை பிரசிடென்சி கல்லூரி 3வது இடம், கோவை பிஎஸ்ஜி பெண்கள் கல்லூரி 4வது இடம், சென்னை லயோலா கல்லூரி7வது இடம் பிடித்துள்ளது. மேலும், நாட்டில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், பெங்களூரு ஐஏஎஸ் முதல் இடம், டெல்லி ஜேஎன்யு 2வது இடம், டெல்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் 3வது இடம் பிடித்துள்ளது.

Related posts

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்: வலைதளத்தில் வரைவு பாடத்திட்டம் வெளியீடு

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!!

காலி இடத்தை சுத்தம் செய்யும்போது குப்பையில் இருந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!