காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி

மும்பை: இடது கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அறுவை சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது ஷமி ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் இடது கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியா மும்பை அணியால் வாங்கப்பட்டதையடுத்து சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது முகமது ஷமியும் விலகியதால் அந்த அணி ஐபிஎல் தொடரில் எவ்வாறு செயல்படும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்