இங்கி. மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி

லண்டன்: இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் வேல்ஸ் நாட்டு இளவரசி கேத்ரின் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை அவரை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர் தனது தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்னர் சார்லஸ் எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என்பது தெரியவில்லை. புராஸ்டேட் சுரப்பி அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. மன்னர் சார்லஸ் ஆண்கள் அனைவரும் தங்களது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்