பிரிக்க முடியாத கூட்டாளி இந்தியா: அமெரிக்க அமைச்சர் ஜேனட் பேட்டி

காந்திநகர்: அமெரிக்காவின் பிரிக்க முடியாத கூட்டாளி நாடு இந்தியா என அந்தநாட்டின் நிதி அமைச்சர் ஜேனட் யெலன் தெரிவித்தார். குஜராத்தின் காந்திநகரில் ம் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் இன்றும், நாளையும் துவங்குகிறது. இதில் கலந்து கொள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் இந்தியா வந்துள்ளார். ஜி- 20 நாடுகளின் நிதியமைச்சர்களை சந்தித்து பேசுவதற்கு முன் ஜேனட் யெலன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ அமெரிக்காவின் பிரிக்க முடியாத கூட்டாளி நாடாக இந்தியா உள்ளது.

இந்தியா-அமெரிக்க இடையேயான உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும். இரு நாடுகளின் உறவில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு சிறப்பான இடமாக இருப்பதால் இந்தியாவில் முதலீட்டுக்கு பல தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன’’ என்றார்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்