இந்திய கடல்சார் பல்கலை கழகத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடக்கிறது: துணைவேந்தர் தகவல்

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், 2023-24ம் ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது என்று பல்கலை துணைவேந்தர் மாலினி சங்கர் கூறினார். சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 2023-24ம் ஆண்டு பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து பல்கலை கழக துணைவேந்தர் மாலினி சங்கர் கூறியதாவது: சென்னை இந்திய கடல்சார் பல்கலை கழகத்துடன் இணைப்பு பெற்ற 17 கடல்சார் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கப்பலில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்காக பி.டெக் (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி (நாட்டிகல் சயின்ஸ்) மற்றும் டிம்பளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் போன்ற இளங்கலை கடல்சார் பாட திட்டங்கள் உள்ளன. மேலும் இளங்கலையில் கப்பல் கட்டிடக்கலைஞர், கப்பல் வடிவமைப்பாளர், கப்பல் பராமரிப்பு பொறியாளர் மற்றும் கடல்சார் தளவாட மேலாளர் போன்ற கடல்சார் அல்லாத பாடதிட்டங்களும் உள்ளன. மேலும் இவை அனைத்திற்கும் முதுகலை படிப்புகளும் உள்ளன.

சென்னையை பொறுத்தவரை வருடத்திற்கு 955 இடங்கள் நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இணைப்பு கல்லூரிகளை பொருத்தவரை அவர்கள் தனியாக கலந்தாய்வு நடத்திக்கொள்வர்.
இது மத்திய பல்கலை கழகம் என்பதால் நுழைவுத்தேர்வுகள் பொறுத்தவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் நடைபெறும். பிராந்திய மொழியில் தேர்வு நடத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உடன், பதிவாளர் சரவணன், இயக்குநர் ராஜீ பாலாஜி ஆகியோர் இருந்தனர்.

Related posts

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு